தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி சிறுவன் உயிரிழப்பு – கிளிநொச்சியில் சம்பவம்…

கிளிநொச்சி- கோவில் பகுதியில் தந்தையின் உழவு இயந்திரத்தை ஓட்டிப்பாா்க்க ஆசைப்பட்ட 6 வயது சிறுவன் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி பரிதாபகரமாக உயிாிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தந்தை வயலுக்கு சென்று விட்டு வீட்டில் உழவு இயந்திரத்தை திறப்புடன் நிறுத்தி வைத்து உணவருந்திக்கொண்டிருந்த சமயம் குறித்த சிறுவன் உழவியந்திரத்தில் ஏறி அதனை இயக்கியுள்ளர்.

இதனால் உழவியந்திரம் அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் குறித்த சிறுவன் வீழ்ந்து சில்லில் நசியுண்டு உயிரிழந்துள்ளான்.

குறித்த சிறுவன் கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்றுவரும் விசேட தேவையுடைய மாணவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...