தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊழலில் சிக்கிய அமெ. கடற்படை அதிகாரி

அமெரிக்க கடற்படையில் உயர் அதிகாரியாக இருந்து வந்தவர் டேனியல் டூசென். இவர் ராணுவ ரகசியம் ஒன்றை மலேசிய ராணுவ தளவாட ஒப்பந்தக்காரர் ஒருவருக்கு கசிய விட்டு ஊழலில் ஈடுபட்டுள்ளார்.  இதற்கு பிரதிபலனாக அவர் சொகுசு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.ame.nevy

அங்கு விபசார அழகிகளை சப்ளை செய்து, செக்ஸ் விருந்து அளிக்கப்பட்டுள்ளது.   ஆனால் இதில் டேனியல் டூசென் வசமாக மாட்டிக்கொண்டார்.இது தொடர்பாக அவர் மீது சாண்டீகோ கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணையின்போது தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.   விசாரணை முடிவில் அவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 70 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.46 லட்சம்) அபராதமும் விதித்து நீதிபதி ஜானிஸ் தீர்ப்பு அளித்தார். மேலும், அவர் கடற்படைக்கு 30 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.19வு லட்சம்) இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.  அமெரிக்காவில் மோசமான ஊழல் வழக்குகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

Comments
Loading...