தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணி முன்னெடுப்பதா? நிறுத்துவதா? – சிவசக்தி ஆனந்தன்

தமிழர் பகுதிகளில் ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதா? அல்லது இத்துடன் நிறுத்துவதா? என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.sivasakthy-ananthan

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற காணி சுவீகரிப்புச்சட்ட கட்டளையை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன. குறித்த பேரணியானது, சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும், இனவாத நோக்கம் கொண்டதாகவும் பலராலும் சித்தரிக்கப்பட்டது.

ஆனால் ‘எழுக தமிழ்’ பேரணியானது இவ்வாறான கீழ்த்தரமான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டதல்ல. அது தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் வெளிகாட்டும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டது. எனவே, இனியும் ‘எழுக தமிழ்’ பேரணியை இனவாத கண்ணோட்டத்துடன் பார்ப்பதை நிறுத்தி, தமிழ் மக்களின் நியாய கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வராவிட்டால், இவ்வாறான பேரணிகளையும் தடுக்க முடியாது.

எனவே இவ்வாறான எழுச்சி பேரணிகள் தொடர்வதா? அல்லது இத்துடன் நிறுத்திக்கொள்வதா என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமரே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Comments
Loading...