தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ எஸ் உறுப்பினர்கள் ஐவருக்கு நாக்கை துண்டித்து தண்டனை!

militanஈராக்­கிய பலுஜ்ஜாஹ் நகரில் இடம்­பெற்ற மோதல்­களின் போது ஐ.எஸ். தீவி­ர­வாத குழு­வி­லி­ருந்து தப்­பி­யோட முயற்­சித்த 5 உறுப்­பி­னர்­க­ளுக்கு தீவி­ர­வா­தி­களால் பொது இடத்தில் வைத்து நாக்கு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.
மேற்­படி பலுஜ்ஜாஹ் நகர்­ க­டந்த இரு வரு­டங்­க­ளாக ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்டில் இருந்து வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் அந்த நகரை மீளக் கைப்­பற்றும் முக­மாக அந்­ந­க­ருக்கு அருகில் ஷியா இன படை­யி­னரால் முக்­கிய தாக்­குதல் நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில், ஐ.எஸ். தீவி­ர­வாத குழுவின் உறுப்­பி­னர்­க­ளான குறிப்­பிட்ட 5 பேரும் தீவி­ர­வாத குழு­வி­லி­ருந்து வெளி­யேறி அந்த நகரை விட்டு தப்­பி­யோட முயற்­சித்­ததாக கூறப்­ப­டு­கி­றது.
இந்­நி­லையில் அவர்கள் ஐவ­ரையும் கைது செய்த தீவி­ர­வா­திகள் அவர்­களை தமது மத நீதி­மன்­றத்தில் நிறுத்­திய போது அவர்­க­ளது நாக்கைத் துண்­டிக்க தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.
மேற்­படி பலுஜ்ஜாஹ் நகரை விட்டு வெளி­யேற முடி­யாது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு தொடர்ந்து சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments
Loading...