தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆபத்தான மாத்திரைகள்…

ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

கொழும்பில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்தேகுறித்த மாத்திரைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.

குறித்த மாத்திரைகள் கருக்கலைப்பு , போதை , மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த மாத்திரைகள் சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த மாத்திரைகளை பயன்படுத்தும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் குழந்தை பெறமுடியாத நிலை ஏற்படும் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...