Designed by Iniyas LTD
ஒரு வாரத்தில் நாடு தழுவிய பாரிய போராட்டம்!
ஒரு வார காலத்திற்குள் தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் அரச சேவையாளர்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென,தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக தற்போது கையொப்பம் திரட்டும் நடவடிக்கையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்புடைய பதிவு
இதேவேளை, கடந்த வாரம் திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் பிரமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரை சந்தித்த தொழிற்சங்க பிரதிநிதிகள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது தனியார் துறையினருக்கான இரண்டாயிரத்து ஐநூறு ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் அரச பணியாளர்களின் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவில், முதற்கட்டமாக இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவை அதிகரிப்பதற்கான சுற்றுநிருபங்கள் இவ்வாரம் சகல நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுமென குறிப்பிட்டதாக அகில இலங்கை நிறைவேற்று அதிகாரிகள் சங்கத் தலைவர் நிமல் கன்னங்கர தெரிவித்துள்ளார்.