தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடந்த ஆண்டில் மட்டும் முல்லைத்தீவில் கஞ்சா தொடர்பில் 130 வழக்குகள்….

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கஞ்கா விற்பனை மற்றும் பாவனை தொடர்பில் 130 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் புதுக்குடியிருப்பில் 24 வழக்குகளும்,முள்ளியவளையில் 32 வழக்குகளும்,வெலிஓயாவில் 26 வழக்குகளும்,முல்லைத்தீவில் 21வழக்குகளும்,மாங்குளத்தில் 13 வழக்குகளும்,மல்லாவியில் 09 வழக்குகளும்,ஒட்டுசுட்டானில் 05 வழக்குகளும்  பதியப்பட்டு நீதிமன்றில்  சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை தமிழீழ ஆட்சி இருந்த காலப்பகுதியில் இல்லாத போதைப் பழக்கத்தை போர் முடிந்த பின்னான காலப்பகுதியில் இனவாத  அரசாங்கம்  தமிழீழ பகுதிகள் எங்கும், போதைப் பழக்கத்தையும் வியாபாரத்தையும் ஊக்குவித்து தமிழ் மக்களை அவற்றிற்கு அடிமையாக்கி மறைமுக யுத்தம் ஒன்றை தமிழர்கள் மீது ஏவிவிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Comments
Loading...