தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரஷ்ய கடலில் தீப்பிடித்த கப்பல்கள்- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு..

ரஷ்ய கடல் பகுதியில் இந்தியர்களுடன் சென்ற இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் பலியானவர்களின்  எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான்சானியக் கொடிகளுடன் நேற்று இரண்டு கப்பல்கள்  ரஷ்யா – கிரிமியா இடையேயான கெர்ச் நீரிணையில்  சென்றன.

இதன்போது ஒரு கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட திரவ எரிவாயு, நடுக்கடலில் டாங்கர் கப்பலான மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது.

அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு இரு கப்பல்களுக்கும் நெருப்பு பரவியது.

அங்கிருந்த  கப்பலில் 8 இந்தியர்கள் மற்றும் 9 துருக்கியர்களும் மற்றொரு கப்பலில் 7 இந்தியர்கள், 7 துருக்கியர் மற்றும் ஒரு லிபியர் இருந்துள்ளனர்.

கப்பல்கள் தீப்பிடித்த விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய கடலோர முகமை தெரிவித்துள்ளது.

இதேவேளை எரிபொருளை மாற்றும் உரிய பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படாததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...