Designed by Iniyas LTD
கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையும் – ஸ்டாலின் நம்பிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையும் என பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேராசிரியர் அ.ராமசாமி எழுதிய “இந்தி எதிர்ப்பு போராட்ட வரலாறு” என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின் கூறுகையில், 1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் தான் தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு காரணமாக அமைந்தது என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதை தான் ஆசிரியர் இதில் விரிவாக குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். மொழிப் போராட்டத்தினுடைய வீரர்களுக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிற நாளை நாம் கொண்டாடவிருக்கிறோம். தி.மு.க. சார்பில் அவர்களுக்கு நாம் வீர வணக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் திகதி தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இதேபோன்று விரைவில் தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.