தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்

கிளிநொச்சியில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால் நேற்றிரவு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஏ – 9 வீதியின் குறுக்காக டயர்களை எரித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏ – 9 வீதியை தடை செய்து, ஒருவர் வாகனங்களை மறித்துள்ளார்.

அவரை அப்புறப்படுத்த அங்கு வந்த பொலிஸார் ஒருவரை, அந்நபர் தாக்கினார். தனையடுத்து, அங்கு குழப்பம் ஏற்பட்டு, கலகம் அடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். அங்கு அதிகளவான பொதுமக்கள் கூடியமையால், பதற்றம் ஏற்பட்டது. தாக்கியவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, அங்கு குழப்பம் பெரிதாகியது. இதனால் நேற்றிரவு பதற்ற நிலை காணப்பட்டது.

kili-tyre-burnt1 kili-tyre-burnt2

Comments
Loading...