Designed by Iniyas LTD
கிளியில் தாய் தந்தையை இழந்து 400 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள்!
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 4284 சிறுவர்கள் தங்களுடைய பெற்றோரை இழந்த நிலையில் வாழ்ந்துவருகின்றனர். அச்சிறுவர்களில் 3044 சிறுவர்கள் தந்தையையும், 764 சிறுவர்கள் தாயையும், 476 சிறுவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்துள்ளனர்.
கூடியதாக கரைச்சி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 1569 சிறுவர்களும், தாயை 411 சிறுவர்களும், இருவரையும் 316 சிறுவர்கள் இழந்துள்ளனர்.
மேலும் கண்டாவளையில் பிரதேச செயலக பிரிவில் 670 சிறுவர்கள் தந்தையையும், 138 சிறுவர்கள் தாயையும்,40 சிறுவர்கள் இருவரையும் இழந்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் தந்தையை 285 சிறுவர்களும், தாயை 71 சிறுவர்களும், இருவரையும் 38 சிறுவர்களும் இழந்துள்ளனர்.
பூநகரி பிரதேச செயலக பிரிவில் 520 சிறுவர்கள் தந்தையையும், 144 சிறுவர்கள் தாயையும், 82 சிறுவர்களும் இருவரையும் ,இழந்துள்ளனர்.