தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குடியரசு தின விழாவில் ஒபாமா, சிறப்பு விருந்தினராக பங்கேற்கஉள்ளார்

இம்மாதம், 26ம் திகதி நடக்கும் குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்தினராக பங்கேற்கஉள்ளார். ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து அசத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குடியரசு தின விழா அன்று, ஒபாமா அமரும் மேடை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள், விழா மேடைக்கு அவர் நடந்து வரும் பாதை, ஆகியவற்றை, வித, விதமான, வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.obamamodi

இதற்காக, ஹாலந்திலிருந்து துலீப் மலர்கள், ரோஜாப்பூக்கள், அந்துாரியம், லில்லி மலர்கள், சிங்கப்பூரில் இருந்து மந்தாரை பூக்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்டு விட்டன. இந்த பூக்கள் வந்ததும், குடியரசு தின விழா மேடையை மலர்களால் அலங்கரிக்கும் பணி துவங்கி விடும். இதற்காக, 15 லட்சம் ரூபாய் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

Comments
Loading...