Designed by Iniyas LTD
குண்டு வெடிப்புச் சம்பவங்களில் எதிரொலி – முல்லைத்தீவில் மக்கள் வீடுகளில் முடக்கம்

கடந்த 21ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களையும் அதனை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற குண்டு வெடிப்புகள் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நடமாட்டம் மிக குறைவாக காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரும் போலீசாரும் ஆயுதம் தாங்கிய நிலையில் வீதிகளில் சோதனை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டிருந்தார்கள்.
குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் வைத்தியசாலைகள் மாவட்ட செயலகம் பிரதேச செயலகங்கள் மற்றும் மக்கள் கூடுகின்ற இடங்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு இருப்பதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது

குறிப்பாக மாங்குளம் ஒட்டுசுட்டான் பகுதிகளிலேயே வீதியில் செல்கின்ற வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வாகணத்தில் இருக்கின்ற பயணிகள் இறக்கப்பட்டு வாகனங்கள் பயணிகளின் பயணப் பொதிகள் பரிசீலனை மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
அத்தோடு இன்று ஞாயிற்றுக்கிழமை தினமாகையால் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் இருந்தபோதிலும் குறிப்பாக முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் மட்டுமே இன்றைய தினம் வழிபாடுகள் இடம்பெற்று இருந்தது.

அதுவும் பல நூற்றுக்கணக்கான ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் இருக்கக்கூடிய வகையில் இன்றைய தினம் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்றது
அதனைவிட மாவடடத்தின் பல பகுதிகளிலும் பகுதிகளிலும் ஆலயங்கள் காணப்படுகின்ற குறிப்பிடட பகுதிகளில் ஒரு ஆலயம் செய்யப்பட்டு இராணுவ பாதுகாப்பில் இன்று ஆராதனைகள் இடம்பெறுகின்றன
ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று முல்லைத்தீவு கடற்கரையில் சுற்றுலாவாக பல நூற்றுக்கணக்கானோர் வருகின்ற போதும் இன்று ஒருவரை கூட காண முடியாத ஒரு நிலையில் காணப்படுகிறது

குறிப்பாக பொதுமக்கள் தங்களுடைய அடிப்படைத் தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் நடமாடித் திரிவதையும் ஏனையவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது