தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கையை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட  அமெரிக்க அதிபர்   ஒப்புதல்…

 மெக்சிகோ அகதிகளின் குழந்தைகளைப் பெற்றோரிடமிருந்து பிரித்து வைக்கும் நடவடிக்கையை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட  அமெரிக்க அதிபர் டிரம்ப்   ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எல்லையை கடந்து வரும் அகதிகளை கைது செய்து அவர்களின் குழந்தைகளை மட்டும் தனியாக அடைத்து வைத்ததற்காக டிரம்ப் அரசு மீது ஐநா.மனித உரிமைக் கவுன்சில் கடும் அதிருப்தியை வெளியிட்டது.
அதோடு அமெரிக்காவின் இந்த செயலிற்கு உலகம் முழுவதும் கண்டனங்களும் வலுத்தன.

இந்த நிலையில் திடீரென இஸ்ரேல் பிரச்சினையை குறிப்பிட்டு ஐநா.மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து விலகிய அமெரிக்கா, தனது கொள்கை முடிவை தளர்த்தியிருக்கிறது.

அதோடு வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து பிரிக்க விரும்பவில்லை என அறிவித்திருந்தார்.

மேலும்   வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு  படையெடுத்து வருவதை அனுமதிக்க முடியாது என்றும், எல்லையை பலமாக பாதுகாப்போம் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...