Designed by Iniyas LTD
கேப்பாபுலவு போராட்ட மக்களை சந்தித்த இந்திய முக்கியஸ்தர்கள்
படையினர் சுவீகரித்து வைத்திருக்கும் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி போராடிவரும் கேப்பாப்புலவு மக்களை இந்தியாவின் முக்கியஸ்தர்கள் சிலர் நேற்றைய தினம் சென்று சந்தித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து நாட்டிற்கு சென்றுள்ள தடாச்சட்ட சிறப்பு சட்டவாளர் சந்திரசேகரன் மற்றும் இன்னும் பல சட்டவாளர்கள் ஆகியோர் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்
இதன்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் இந்தவிடயத்தில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் மக்களிடம் கேட்டறிந்துகொண்டனர்
குறித்த சந்திப்பின்போது மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை அவர்களிடத்தில் தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.



