தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொக்குத்தொடுவாயில் தொடர்ந்து சிக்கும் வெடிபொருட்கள் அச்சத்தில் மக்கள்….

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் வடக்கில் வசிக்கும் இந்திரதாசன் யாழினி என்பவர் வீட்டு முற்றத்தை பெருக்கி குப்பையை குழிதோண்டி புதைக்க நேற்று முயற்சித்த போது அபாயகரமான வெடிபொருட்கள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொக்குத்தொடுவாய் பொலிஸ் நிலயத்தில் தகவல் வழங்கியதை அடுத்து,

சம்பவ  இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பொலிஸார் குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 மேலும் நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கும்வரை குறித்த பகுதியில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் அவர்கள்  கூறியுள்ளனர்.

 இதேவேளை நேற்று நன்பகல் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதி தனியார் காணி ஒன்றில் கனரக வாகனத்தை தகர்த்து அழிக்கும் அபாயகரமான வெடிபொருள் ஒன்று மண்ணில் புதைந்திருந்த நிலையில விசேட அதிரடிப்படையினரால் மீட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1984 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் கொக்குத்தொடுவாய் பிரதேசம் கொண்டுவரப்பட்டபோது அந்தப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்..

27வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த ஊரில் (2011 ஆம் ஆண்டு )பொதுமக்கள் மீள்குடியேறியபோது பதுகாப்பான பிரதேசம் என இந்தப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் நீண்ட காலமாக இராணுவம் நிலைகொண்டிருந்த கொக்குதொடுவாய் பகுதியில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கூட உரிய முறையில் அகற்றப்படவில்லை.

இராணுவம் வெடிபொருட்கள் புதைத்த இடம் இராணுவத்துக்கு தெரியாதா  ஏன் உரியமுறையில அகற்றப்படவில்லை இதனால் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும்,  எனவே தமது பகுதிகளை மீள கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டுக்கு உட்ப்படுத்துமாறு குறித்த பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Loading...