தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொடிகாமத்தில் பேருந்து மீது இனந்தெரியாதோர் கல்வீச்சுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீது கொடிகாமம் பகுதியில் இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைகாட்டிச் சந்திக்கு அருகில் இடம்பெற்ற இந்த கல்வீச்சுத் தாக்குதலில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளர்.

Comments
Loading...