தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோத்தாவை கைது செய்யுமாறு ஒபாமாவிடம் கோரிக்கை!

senpakam copyஸ்ரீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம், தமிழ் அமைப்புகள் இரண்டு, கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒபாமாவுக்கான தமிழன் மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை ஆகிய இரு அமைப்புகளுமே, மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமான யுத்தத்தின் போது, யுத்தக் குற்றங்களைச் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரைக் கைது செய்யுமாறு, அவ்விரு அமைப்புகளும், ஒபாமாவிடம் கோரியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...