Designed by Iniyas LTD
சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி 28 இலட்சம் பெறுமதியான கொள்கலன் பறிமுதல்
இந்தியாவிலிருந்து சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி 28 இலட்சம் ரூபா பெறுமதியான பொருள்களடங்கிய கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
குறித்த கொள்கலனை சுங்க அதிகாரிகள் நேற்றைய தினம் பறிமுதல் செய்துள்ளனர் .
போலி ஆவணங்களை சமர்ப்பித்தே இந்தப் பொருள்கள் அடங்கிய கொள்கலன் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொருட்கள்
குறித்த கொள்கலனில் 16 இலட்சம் ரூபா பெறுமதியான 2 இலட்சம் மாத்திரைகள், 72 இலட்சம் ரூபா பெறுமதியான 8 ஆயிரத்து 500 சோடி ஆண் ,பெண்களுக்கான செருப்புக்கள் இருந்துள்ளன
மேலும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான 4 ஆயிரம் சோடி ஆண், பெண்களுக்கான சப்பாத்துக்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெவிக்கப்பட்டுள்ளது.