Designed by Iniyas LTD
சார்க் கூட்டமைப்பு நாடுகள் நேபாளத்தில் இன்று கூடுகிறது !
தெற்காசிய நாடுகளை உறுப்பினராகக் கொண்டுள்ள சார்க் கூட்டமைப்பு நேபாளத்தில் இன்று கூடுகிறது.
இந்த கூட்டத்தில், தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ள வேண்டிய பயங்கரவாத தடுப்பு,வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், இந்த மாநாட்டின்போது, சார்க் உறுப்புநாடுகளிடையே தரைவழியான வர்த்தகப் பாதை ஒன்றை நிறுவுவதில், அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பை பெறவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியா,இலங்கை,வங்கதேசம்,நேபாளம்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பூடான்,மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இந்த சார்க் உச்சி மாநாடு வரும் 17ம் தேதி வரை நடக்க உள்ளன. இம்மாநாட்டுக்கு முன்னதாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவு செயலாளரும், ‘சார்க்’ அமைப்பின் இணை செயலாளருமான எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.