Designed by Iniyas LTD
சாவகச்சேரியில் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள்
சாவகச்சேரியில், தலா 10 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அபிவிருத்தி வங்கிக்கும், சீலெக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் இது தொடர்பான கடன் உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் கீழ், ஒரு அலகு மின்சாரத்தை 10.90 ரூபாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மின்சார சபை 20 ரூபாவைச் செலவிடுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிநிலையில் குறித்த இரண்டு காற்றாலைகளிலும் மொத்தமாக 8 காற்றாடிகள் பொருத்தப்பட்டு, ஒவ்வொன்றில் இருந்தும், தலா 2.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,
இந்த திட்டத்துக்கான மொத்த செலவு 28 மில்லியன் டொலர் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தேசிய அபிவிருத்தி வங்கி 3000 மில்லியன் ரூபாவை கடனாக வழங்கவுள்ளது.
எஞ்சிய நிதியை சீலெக்ஸ் பொறியியல் நிறுவனம் மற்றும் லங்கா வென்சேர்ஸ் நிறுவனம் என்பன முதலீடு செய்யும் என்றும் கூறபப்ட்டுள்ளது.
இதேவேளை ஐரோப்பிய தர நியமங்களுக்கு அமைய உருவாக்கப்படும் இந்தக் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம், 2019 நடுப்பகுதியில் இருந்து தேசிய மின் விநியோகத்துக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.