Designed by Iniyas LTD
சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் சீர்திருத்த நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் – ஜேர்மனி
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் சீர்திருத்த நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் என ஜேர்மனி கோரியுள்ளது.
இதன் மூலம் நல்லாட்சி மற்றும் சமூக நலன்கள் பலப்படும் என கொழும்பில் உள்ள ஜேர்மன் தூதுவராலயம் குறிப்பிட்டுள்ளதுடன் அதற்கான சகல ஒத்துழைப்பையும் ஜேர்மன் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேமன் வெளிவிவகார அமைச்சின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்திய இயக்குனர் பீற்றர் புரூகல் கடந்த 9ஆம் திகதி இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இவர் கடந்த 13ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்தார்.
இங்கு தங்கியிருந்த காலப்பகுதியினில் அவர் கொழும்பு மற்றும் வடக்கு பிரதேசங்களைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், குடியியல் சமூகத்தவர்கள் மற்றும் சமய தலைவர்களை சந்தித்து உரையாடியிருந்தார்.
இவரின் விஜயம் தொடர்பாக ஜேமன் தூதுவராலயம் இன்று விடுத்துள்ள அறிக்கையிலே இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலும் ஜேமன் உரிய ஒத்துழைப்பினை வழங்கும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.