தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறிலங்கா – இந்தியா பொருளாதார ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு

இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளவுள்ள இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று கண்டனக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.india-sri-lanka

இலங்கையின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் கூட்டமைப்பு இக் கண்டனக் கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளது. குறித்த ஒப்பந்தம் காரணமாக இலங்கையில் உள்ள சுமார் எண்பதினாயிரம் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை ஐந்து மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் ஒரு கண்டனக் கூட்டத்தை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். குறித்த ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்க மருத்துவர்கள் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...