தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுவர்களை குறி வைக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு : ஈராக்கில் இதுவரை 111 சிறுவர்கள் கடத்தல்

isisஈராக்கில் தொடர்ச்சியாக இதுவரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர்.

ஈராக் நாட்டின் மொசூல் நகரின் பல்வேறு பகுதியில் இருந்து 111 சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடககங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஐ.எஸ். அமைப்பில் சிறுவர்களை சேர்த்து பயங்கரவாதிகளாக மாற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறுவர்கள் கடத்தப்படுவதை தடுத்த 78 பேரையும் பயங்கரவாதிகள் சிறைபிடித்துள்ளனர். மொசூல் நகரில் கடந்த ஒராண்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகரித்ததையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

Comments
Loading...