தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சீனப் பட்டாசு விற்பனையை தடுக்க 42 தனிப்படைகள்!

cracker1_650_091814025017தமிழகத்தில் சீனப் பட்டாசு விற்பனையை தடுக்க 42 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை, தீயணைப்புத்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் கொண்டு இந்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுளன.

 பட்டாசுகளை விற்கும் கடைகள், கிடங்குகளில் இந்த தனிப்படையினர் சோதனை நடத்தி, சீனப்பட்டாசு விற்பனையை தடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், சீனப்பட்டாசு விற்பனை நடந்தால், அது குறித்து தகவல் அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வெடிபொருட்களை கொண்டு சீனப்பட்டாசுகள் தயாரிக்கப்படுவதால், அவற்றை பயன்படுத்த இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...