Designed by Iniyas LTD
சென்னையில் ரவுடிகளை ஒழிக்க நடவடிக்கை!
சென்னையில் தி.மு.க. பிரமுகர் ஜெகநாதன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேற்று சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். சென்னையில் உலா வரும் மொத்த ரவுடிகள் பட்டியலை தயாரித்து, அவர்கள் மீதுள்ள வழக்குகள் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, உரிய தண்டனை பெற்றுக்கொடுக்க ஆணை பிறப்பித்துள்ளார். துப்பாக்கி வைத்திருக்கும் ரவுடிகளை இனம் கண்டு, இரும்புக்கரம் கொண்டு அவர்களை ஒடுக்கவும் அவர் ஆணையிட்டுள்ளார். குறிப்பாக சி.டி.மணி போன்ற ரவுடிகள் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டும், வழக்கு களில் தண்டனை பெறாமல் எளிதில் ஜாமீன் பெற்று வெளியில் உலா வருவது எப்படி?, இது போல் ரவுடிகளை உலா வர அனுமதிக்கும் போலீஸ் அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.