Designed by Iniyas LTD
செல்லரித்து போன தமிழகம் – ராமதாஸ்
ஊழலில் திளைக்கும் திமுக, அதிமுக மாறி, மாறி ஆட்சி செய்வதால் தமிழகம் செல்லரித்து போய் விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். 
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த 10 ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் சுமார் 70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஓட்டுக்கு பணம் தரும் கலாசாரத்தை திமுகவும் அதிமுகவும் வளர்த்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
தேர்தலுக்கு முன் பணத்தையும், தேர்தலுக்கு பின் இலவசத்தையும் கொடுத்து மக்களை இவ்விரு கட்சிகளும் அடிமையாக்குவதாக ராமதாஸ் குற்றஞ்சாட்டினார். கடந்த 46 ஆண்டு காலமாக இரு கட்சிகளும் மதுபான கடை திறந்துவிட்டு மக்களை குடிகாரர்களாக்கி உள்ளதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.