தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விஜயகாந்த்தை மநகூக்கு வைகோ அழைப்பது ஏன்? – தமிழருவி மணியன்

குடும்ப அரசியல் நடத்தும் விஜயகாந்தை மக்கள் நல கூட்டணிக்கு வைகோ வரவேற்பது ஏன் என தமிழருவி மணியன் கேள்வி எழுப்பி உள்ளார் .tamilaruvi maniyan

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் உமாராணியையும் விசில் சின்னத்தையும் காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன் விஜயகாந்தின் மனைவி மற்றும் மைத்துனர் எடுக்கும் முடிவே தேமுதிக கட்சியின் முடிவாக உள்ளது என விமர்சித்தார். அவருக்காக மக்கள் நல கூட்டணி காத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய தமிழருவி மணியன்,  மக்கள் நல கூட்டணி வைகோ அல்லது திருமாவளவனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று குறிப்பிட்டார்.

Comments
Loading...