தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதியல் விடுக்கப்பட்ட வர்த்தமானியை, எச்சந்தர்ப்பத்திலும் ஜனாத்பதி  இரத்துச் செய்ய மாட்டார் – பந்துல குணவர்தன

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாகத் தெரிவித்து ஜனாதிபதியல் விடுக்கப்பட்ட வர்த்தமானியை, எச்சந்தர்ப்பத்திலும் ஜனாத்பதி  இரத்துச் செய்ய மாட்டார் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்ப நிலைக்கு, தேர்தல் ஒன்றே தீர்வு என்பதாலேயே, ஜனாதிபதி இத்தீர்மானத்தை எடுத்திருந்தாரெனவும் அவர்  கூறியுள்ளார்.
ஜனாதிபதியால் புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்த்தன ,  பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை  வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் “ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான, மற்ரும் மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல்களையும், ஜனாதிபதி வெளியிட்டிருந்ததாகவும்,.
அதற்கான  அதிகாரம், ஜனாதிபதிக்கு  இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு  நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற அமர்வுகளைத் தொடர்ந்து கொண்டு செல்ல முடியாது என்பதன்  காரணமாகவே , ஜனாதிபதி  நாடாளுமன்றினை கலைத்ததாகவும் இதன்போது பந்துல குணவர்த்தன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...