Designed by Iniyas LTD
டி20 போட்டிகளில் 600 சிக்சர்கள் அடித்த கிறிஸ் கெய்ல்
மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் டி20 போட்டிகளில் 600 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். உலகம் முழுவதும் நடக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்று வரும் கிறிஸ் கெய்ல், தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் வங்கசேதம் பிரீமியர் லீக் பேட்டியில் பரிசால் புல்ஸ் அணியில் பங்கேற்ற கெய்ல், 47 பந்தில் 92 ஓட்டங்கள் விளாசினர். இதில் 9 சிக்சர்கள் அடங்கும். அப்போது அவர் 598 சிக்சர்கள் அடித்திருந்தார். தற்போது அவர் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடந்தப் போட்டியில் 16 பந்தில் இரண்டு சிக்சர்களுடன் 23 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது அவர் டி20 லீக் போட்டிகளில் 600 சிக்சர்கள் அடித்து சாதனைப் படைத்தார். இவருக்கு அடுத்தப்படியாக பொல்லார்ட் (388 சிக்சர்கள்), நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்குல்லம் (290 சிக்சர்கள்) உள்ளனர்.