Designed by Iniyas LTD
டோர்னியர் விமானம் தேடுதல் பணியில் முன்னேற்றம் இல்லை :சென்னை திரும்பியது நீர்மூழ்கி கப்பல்
காணாமல் போன கடலோர பாதுகாப்புப் படையின் டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பல் சென்னை திரும்பியுள்ளது.
ஒரு வாரம் நடத்தப்பட்ட தேடுதல் பணியில் முன்னேற்றம் ஏற்படாததையடுத்து அந்த நீர்மூழ்கிக் கப்பலின் தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தேடுதல் பணியில் ஈடுபட்ட தேசிய கடல் ஆய்வு மையத்தின் சாகர்நிதி கப்பல், ஒலிம்பிக் கேனியன் கப்பல் ஆகியவை நடத்திய ஆய்விலும் விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
தற்போது கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான 2 கப்பல்களும், 2 விமானங்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாக கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு மண்டல ஐஜி ஷர்மா கூறியுள்ளார்.