Designed by Iniyas LTD
தஞ்சையில் ரயில் மறியல்: தண்டவாளத்தில் சமைத்து விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் தஞ்சையில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை வந்த பயணிகள் ரெயிலை விவசாயிகள் மறித்தனர். ரெயில் என்ஜீன் மீது ஏறி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் கையில் பாய், படுக்கை விரிப்புகள், மண் அடுப்பு எடுத்து வந்தனர். அவர்கள் தண்டவாளத்தில் அடுப்பை எரிய வைத்து சமையல் செய்யும் போராட்டம் நடத்தினார்கள். இதனால் பரபரப்பு உருவானது. முன்னதாக ரயில் மறியலுக்கு சென்ற விவசாயிகள் சங்க நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் உபயத்துல்லா, முன்னாள் மாவட்ட பெ£றுப்பாளர் து. செல்வம், ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் கிருஷ்ணசாமி, அஞ்சுகம் பூபதி, காரல் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் துரை. மாணிக்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சண்முகம், காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாநகர தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சாமி. நடராஜன், செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.