Designed by Iniyas LTD
தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை வறுமையில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வழங்கிய பிரதேசசபை உறுப்பினர்
தனக்கு வழங்கப்படும் சம்பளத்தை வறுமையில் உள்ள குடும்பத்துக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வழங்கியுள்ளார்.
ஒட்டுசுட்டானைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதேசபை உறுப்பினரான சந்திரரூபன் இவ்வாறு தனது முதல் மாதச் சம்பளமான 15 ஆயிரம் ரூபாவை வறுமையில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை ஒட்டுசுட்டானில் வைத்து அதே இடத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு அவர் இதனை வழங்கியுள்ளார்.
இதேவேளை, சுயேச்சைக் குழு உறுப்பினரான சி.சுரேஷ் தனது சம்பளத்தையும் இவ்வாறு வழங்கப் போவதாக சபை அமர்வில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.