தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு…

தமிழக மீனவரின் சடலத்தை உரிய முறையில் ஒப்படைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்கு  நேற்றையதினம்  காங்கேசன்துறை பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

இதன் போது நீதிவான் உயிரிழந்த மீனவரின் சடலத்தினை  உறவினர்கள் பொறுப்பெடுக்க வந்தால் , அவர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்,

இல்லையெனில்  யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் தொடர்புகொண்டு சடலத்தை ஒப்படைக்குமாறும் நீதிவான் பொலிஸாருக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

அது தொடர்பில் யாழில்.உள்ள இந்திய துணை தூதரகத்துடன் பொலிஸார்  தொடர்பு கொண்ட போது , சடலத்தை பொறுப்பேற்பது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க அவர்கள்  கால அவகாசம் கோரியுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த மீனவரின்   சடலம் தொடர்ந்தும்  யாழ். போதனா வைத்திய சாலை பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...