தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர் படுகொலைக்கு தாயக மீனவர்கள் கண்டனம்!

hqdefaultதலை­மன்­னார்க் கடற்­ப­ரப்­பில் இந்­திய மீன­வ­ரைச் சுட்­டுக் கொன்ற சம்­ப­வம் கண்­ட­னத்­துக்­கு­ரி­யது என்று வடக்கு மாகாண கடற்­றொ­ழில் இணை­யச் செய­லா் எம்.சுப்­பி­ர­ம­ணி­யம் தெரி­வித்­தார்.
தலை­மன்­னார்க் கடற்­ப­ரப்­பில் நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருந்த இந்­திய மீன­வா்­க­ளின் பட­கு­க­ளில் இனந்­தெ­ரி­யா­தோ­ரின் சூட்­டுச் சம்­ப­வம் இடம்­பெற்­றது. இந்­தச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் பட­கில் இருந்த பிரிஜ்ஜோ (வயது-21) என்ற மீன­வர் மீது குண்­டு­கள் பாய்ந்­தன. ஒரு குண்டு அவர் கழுத்­தைத் துளைத்­தது. பட­குக்கு உள்­ளேயே அவர் சாவ­டைந்­தார். சரோண் (வயது -–24) என்­ப­வர் வலது கால், இடது கை போன்­ற­வற்­றில் குண்டு பாய்ந்து காயம் அடைந்­தார்.
இந்­தச் சம்­ப­வத்­துக்கே அவர் கண்­ட­னம் வெளி­யிட்­டார்.
வடக்கு மாகாண கடற்­றொ­ழில் இணை­யச் செய­லா் மேலும் தெரி­வித்­த­தா­வது,இந்­திய மீன­வா்­க­ளாக இருந்­தா­லும் சரி, இலங்கை மீன­வா்­க­ளாக இருந்­தா­லும் சரி, அவா்­கள் தமது வாழ்­வா­தா­ரத்தை நோக்­கா­கக்­கொண்டு தொழி­லுக்குச் செல்­கின்­ற­னா். அவா்­க­ளு­டைய பாது­காப்பு முக்­கி­ய­ மா­ன­தா­கும். அவா்­க­ளு­டைய குடும்­பம் அவா்­க­ளுக்­காக காத்­தி­ருக்­கும். அந்த வகை­யில் நேற்று நடை­பெற்ற சம்­ப­வம் வருத்­தத்­துக்­கு­ரி­ய­தும் கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­தும் ஆகும்.
இலங்­கைக் கடற்­ப­டை­யி­ன­ரால்­தான் இவா் சுடப்­பட்­டார் எனச் செய்­தி­கள் வெளி­வந்­துள்­ளன. எனி­னும் இது இன்­ன­மும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யில் இருப்­ப­தால் இது தொடா்­பாக நாம் எது­வும் கூற­மு­டி­யாது. இந்­திய மீன­வா்­க­ளின் எல்லை அத்­து­மீ­றல் தொடா்ந்த வண்­ணம் உள்­ளது. ஆனால் உயிர் பறிப்பு  மூலம் அந்­தப் பிரச்­சி­னையைத் தீா்க்காமல் பேச்­சுக்­க­ளின் மூலம் தீா்ப்பதற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இந்­திய மீன­வா்­க­ளின் எல்லை அத்­து­மீ­றல் தொடா்­பாக பேச்­சுக்­கள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த வேளை­யில் இந்­திய மீன­வா்­க­ளின் மீது சுடப்­பட்ட செய்­தி­யா­னது வருத்­தத்­துக்கு உரி­ய­தா­கும்.
இந்­திய மீனவ நாட்­டுப்­ப­டகு உரி­மை­யா­ளா்­கள் இழு­வை­ம­டித் தொழில் படகு உரி­மை­யா­ளா்­க­ளுக்கு எதி­ராக நேற்று இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டத்­தில் போராட்­டம் நடத்­தி­யி­ருந்­த­னா். போராட்­டம் நடை­பெற்று இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளின் பின்பு இந்­தச் சூட்­டுச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ள­து என்­றார்
Comments
Loading...