Designed by Iniyas LTD
தமிழக மீனவர்கள் 24 பேரின் காவல் நீட்டிப்பு- மன்னார் நீதிமன்றம் உத்தரவு
தமிழக மீனவர்கள் 24 பேரின் காவலை இரண்டாவது தடவையாக நவம்பர் 11ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
கடந்த 13ஆம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இராமேஸ்வரத்தை சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை நவம்பர் 11ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே 86 மீனவர்களை இன்று இலங்கை அரசு விடுதலை செய்யும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்படி மீனவர்களின் காவல் நீட்டிப்பை மன்னார் நீதிமன்றம் அறிவித்துள்ளது.