Designed by Iniyas LTD
யாழ் கடலில் தமிழக மீனவர்கள் எட்டு பேர் கைது!
யாழ் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காரைநகருக்கும் நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இவர்கள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு, இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை விசாரணைகளின் பின்னர், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.