Designed by Iniyas LTD
தமிழக மீனவர்கள் தீபாவளிக்கு முன்னர் விடுவிக்கப்படுவர்: இலங்கை அமைச்சர்
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் தீபாவளிக்கு முன் விடுவிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் தீபாவளிக்கு முன்னர் மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.
சட்டவிரோத படகுகளுக்கு எதிராக இலங்கையில் நடைமுறைப்படுத்தும் சட்டத்திற்கு இந்திய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் கூறியிருந்தனர்.
இதற்கு அமைச்சர் இசைவு தெரிவித்த போதிலும் இந்திய மீனவர்களின் ஊடுருவலால் இலங்கையின்
வடக்குப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்திய மீனவர்கள் இழுவைப்படகைப் பயன்படுத்த அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்.
மீனவர்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகக் கூறிய மகிந்த அமரவீர, ஆவணங்கள் தயார் செய்யப்பட்ட பின் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.