தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் காணிகளில் அத்துமீறி குடியேறியுள்ள சிங்களவர்களிற்கு காணி உத்தரவு பத்திரங்களை வழங்கிய மகாவலி அதிகாரசபை ….

முல்லைத்தீவு  கொக்கிளாய், கருணாட்டுக்கேணி, கொக்கு தொடுவாய் ஆகிய தமிழ் கிராமங்களில் அத்துமீறி  சிங்கள மீனவர்கள் குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் அவர்கள் அங்கு  நிரந்தரமாக தங்கியிருந்து தொழில் செய்வதற்கான காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகாரசபை வழங்கியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1983ஆம் ஆண்டு போர் காரணமாக கொக்கிளாய், கருணாட்டுகேணி, கொக்குதொடுவாய் பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் தமிழ் மக்களுடைய குடியிருப்பு நிலங்களில்   சிங்கள மக்கள் அத்துமீறி குடியேறியிருந்தனர்.

இதன் காரணமாக  தமிழ் மீனவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் இரு சிங்கள மீனவர்களுக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச செயலகம் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த  வழக்கின் தீர்ப்பில் மேற்படி சிங்கள மீனவர்கள் தமிழ் மக்களின் நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் மகாவலி அதிகாரசபை மேற்படி மீனவர்களையும் சேர்த்து 8 பேருக்கு குறித்த  கிராமங்களில் நிரந்தரமாக தங்கியிருந்து கடற்றொழில் செய்வதற்கான காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றம் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்துள்ள காணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என தீர்ப்பளித்திருந்தும்,  அதனை மீறி மகாவலி அதிகாரசபை காணி உத்தரவு பத்திரங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...