தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் பகுதியெங்கும் படைக்கு ஆட்களை திரட்டும் மகிந்த அரசு

images (1)
யாழ்ப்பாணத்திலும் சிறீலங்கா படைகளுக்கு பெண்களை இணைக்கும் முயற்சி இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தந்த கிராமத்தில் அங்கு பணியில் இருக்கும் கிராம சேவையாளர்களைக் கொண்டு  யாழ்ப்பாணத்திலும் சிறீலங்கா படைகளுக்கு பெண்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென்மராட்சிப் பிரதேச சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் அண்மையில் இடம்பெற்றது.இதில் கலந்து கொண்டிருந்த கிராம சேவையாளர்கள் படையில் பெண்களை கட்டாயப்படுத்தி இணைப்பது தொடர்பாக பகிரங்கமாக சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவு வேளைகளிலும் தமது வீடுகளுக்கு வரும் சிறீலங்கா படைகள் பெண்களை சிறீலங்கா படைக்கு இணைத்துத் தருமாறு கோரி வற்புறுத்தி வருவதாக அந்தக் கூட்டத்தில் கிராம சேவையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தமது பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களின் விபரங்கள், அவர்களின் தொலைபேசி இலக்கங்கள், அவர்களுக்குள்ள காணிகள் சொத்துக்கள், மற்றும் அவர்களின் ஏனைய விபரங்களையும் தமக்குத் திரட்டிதருமாறு படையினர் தம்மை வற்புறுத்தி கேட்பதாகக் கிராமசேவையாளர்கள் தெரிவித்தனர்.

தங்களது பெண்பிள்ளைகளையே தம்மிடம் நேரடியாக வந்து படையில் இணைத்துதருமாறு கேட்பது தொடர்பாக அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...