தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர்கள் விடயத்தில் கால அவகாசம் வழங்குவது, ஐ.நா. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறது – சி.வி. விக்னேஸ்வரன்

தமிழர்கள் விடயத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்குவது, ஐ.நா. தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் செயலென வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு போர்க்குற்ற விசாரணை உட்பட மனித உரிமைகள் சபை தீர்மானத்தின் பல விடயங்களை நிறைவேற்றப்போவதில்லை என ஜனாதிபதி வெளிப்படையாக கூறியுள்ள நிலையில், கால அவகாசம் எதற்காக என்பதை உறுப்பு நாடுகளும், ஐ.நா. சபையின் ஆணையாளரும் சிந்தித்து, மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த ஆர்ப்பட்டம் தொடர்பாக சி.வி.விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“மனித உரிமைகள் சபை தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்குவதானது, மனித உரிமைகள் சபை பாதிக்கப்பட்ட எமது மக்களை ஏமாற்றுவதாகவே அமையும்.

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கையாள வேண்டும் என்று கோரியுள்ளோம். அது சாத்தியப்படாவிட்டால் சர்வதேச சட்டங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அமைவான பொருத்தமான ஒரு பொறிமுறையின் கீழ் மனித உரிமைகள் சபை இதனைக் கையாள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments
Loading...