தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ், முஸ்லிம் மக்களிடையேயும், சிங்களவர்களிடையேயும் இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிட முயற்சிக்கின்றார் – மனோகணேசன்

மகிந்த மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தைத் தூண்டி, மூவின மக்களது ஒற்றுமையைக் குழிதோண்டிப் புதைக்க எண்ணியுள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.    நேற்று கொழும்பில் இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    அவர்  மேலும் தெரிவிக்கையில்,   கடந்த வருடம் மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் அறிக்கையை வைத்து பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு தமிழ், முஸ்லிம் மக்களிடையேயும், சிங்களவர்களிடையேயும் இனவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு மீண்டும் புலிகள் தலைதூக்கியுள்ளார்கள், அதற்கு இடமளிக்கக்கூடாது .  mano

இந்த நாட்டில் தம்முடைய அதிகாரத்தை நிலைநாட்ட பல்வேறு யுத்திகளைக் கையாண்டு வருகின்றார். இவரின் இனவாத அரசியலுக்கு அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை முன்னிலைப்படுத்தி பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்.    அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையானது நல்லாட்சி அரசின் காலத்தில் எடுக்கப்பட்ட தரவுகளுக்கு அமைய தயாரிக்கப்பட்டது அல்ல. அந்த அறிக்கை மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்தில் தயாரிக்கப்பட்டது என்பதை அவர் மறந்து விடக்கூடாது.   மேலும் இந்த நாட்டில் இனவாத ஆட்சியைக் கொண்டு செல்ல முயற்சித்து வரும் மகிந்தவின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments
Loading...