தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமுகவிடம் அகப்பட்ட அம்மா மருந்து பொட்டகங்கள்

திருவண்ணமலை மாவட்ட மருந்து கிடங்கில் இருந்து 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அம்மா குழந்தை பெட்டகப் பொருட்களுடன் கிளம்பிய வாகனங்களை திமுகவினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  baby_kit

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாநகரில் இயங்கி வரும் மாவட்ட மருந்து கிடங்கில் இருந்து, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முதலமைச்சர் படம் ஒட்டப்பட்ட அம்மா குழந்தைகள் பெட்டகங்கள், மருத்துவ ஊர்திகள் மூலம் அனுப்பப்படுவதாக தகவல் வெளியானது.   இதனையறிந்த திமுகவினர் வாகனங்களை வழிமறித்து, தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ள போது முதலமைச்சர் படம் ஒட்டப்பட்ட பெட்டகங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, மாவட்ட மருந்து கிடங்கை திமுகவினர் முற்றுகையிட்டனர்.   நீண்ட நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பெட்டக பைகளில் முதலமைச்சர் படம் இருந்ததால், அனைத்து பண்டல்களையும் அறையில் வைத்து சீல் வைத்தனர்.

Comments
Loading...