Designed by Iniyas LTD
தென்னமரவாடி பகுதியில் குடியேறியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானம்
திருகோணமலை தென்னமரவாடி பகுதியில் குடியேறியுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 1980களில் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தாங்களாகவே சென்று குடியேறியதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் தங்களுக்கான எந்தவிதமான உதவிகளும் அரசாங்கத்தினால் வழங்கப்படுவதில்லை. பாதை வசதிகளோ, மின்சார வசதிகளோ இல்லாத நிலை தொடர்கிறது. சிங்களவர்களால் காணி சுவீகரிப்பும் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரிடம் முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களும் கைவிட்டுவிட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.