தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தொண்டராசிரியர்களிற்கு உடனடி நியமனம் வழங்குமாறு கோரி கிழக்கில் ஆர்ப்பாட்டம்…

கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்கள் 456 பேருக்கும் நிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்குமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஐம்பதிற்கும் மேற்பட்ட தொண்டராசிரியர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த போராட்டம் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால்  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட தொண்டராசிரியர்களிற்கு  நிரந்தர நியமனம் வழங்கும் திகதியை அறிவிக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...