Designed by Iniyas LTD
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து
உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரோசய்யா, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கவும் அவர்களின் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைக்க வேண்டும் என்ற சிந்தனையையும் மே தினம் நினைவூட்டுவதாக கூறியுள்ளார்.
இந்த தினத்தில் தொழிலாளர்கள் எல்லா வளமும் நலனும் பெற்று வாழ வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைவரும் நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் நிச்சயம் வெற்றி பெறலாம் என கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்திடும் தொழிலாளர்கள், எல்லா வளங்களும், நலங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டும் என வாழ்த்தியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தொழிலாளர் சமுதாயம் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்துவதாக தெரிவித்தள்ளார். இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே. வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.