தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள்..

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு  கைதான தமிழக மீனவர்கள் 7 பேரை  இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நேற்று காலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தஞ்சை மாவட்ட மீனவர்களை  எல்லை தாண்டியதாக  கூறி இரண்டு படகையும் அதிலிருந்த 7 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை  கடற்படையினர்  காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை செய்ய்துள்ளனர்.

அதன் பின்னர்  மீனவர்களை  ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது  பல்வேறு கட்ட விசாரணைக்கு பின் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் எதிர்வரும் காலங்களில்  எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வருடம் சிறைதண்டனை அளிக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதேவேளை எதிர்வரும்  செப்டம்பர் 29ம் தேதி படகின் உரிமையாளர்களை நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களோடு ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு உரிமையாளர்கள் நிதிமன்றில்  ஆஜராகவில்லை எனில் குறித்த  படகுகள் அரசுடமையாக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...