Designed by Iniyas LTD
“நாட்டில் சகிப்புத்தன்மை, கருத்துச் சுதந்திரத்துக்கு பாதிப்பு’: மன்மோகன் சிங் வருத்தம்
கருத்துச் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கை மீது அண்மையில் நடைபெற்ற தாக்குதல்கள் நாட்டையே கவலைக்குள்ளாக்கி இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஜவகர்லால் நேருவின் நினைவு நிகழ்ச்சியில் பேசிய அவர், கருத்து மாறுபாடு கொண்ட எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்கள் நியாயப்படுத்த முடியாதவை என்றும் கூறினார்.
மாற்றுக் கருத்து மற்றும் உணவு முறை தொடர்பாக வன்முறையில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல என்ற மன்மோகன் சிங், ஒத்த கருத்துடைய ஒவ்வொருவரும் இதுபோன்ற சகிப்புத்தன்மை இல்லாத சம்பவங்களை ஒரே குரலில் கண்டித்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.