Designed by Iniyas LTD
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும்
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும் என்று ஓய்வுபெறும் நீதிபதி ஹரிபரந்தாமன் பிரிவு உபச்சார விழாவில் பேசும்போது வலியுறுத்தினார். 
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமனின் பதவிக் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இதனை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவருக்கு பிரிவு உபச்சாரம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏற்புரை ஆற்றிய நீதிபதி ஹரிபரந்தாமன், நீதிபதியாக பணியாற்றிட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும் என பேசிய அவர், இதற்காக கொலீஜியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறும்பான்மையினர், பெண்கள் ஆகியோரின் பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினார்.