தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பகிடிவதையால் தற்கொலைக்கு தூண்டப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவன்…

யாழ்.பல்கலைகழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்.பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கற்கும் பளை பகுதியை சேர்ந்த முதலாம் வருட மாணவனே  இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்று   மாலை வீட்டிலிருந்தவர்களிடம் பல்கலைகழகத்தில் தான் மோசமான பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக கூறியுள்ளார்.

பின்னர் தனது அறைக்குள் சென்று கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதை   அவதானித்த வீட்டிலிருந்தோர் அவரை உடனடியாக மீட்டு பளை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் பளை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சை கிளிநொச்சி வைத்தியசாலையில் குறித்த  மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவியவந்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...